சந்தேகநபரை பிடிக்க பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்!

ஹிக்கடுவையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும் சந்தேகநபர் ஒருவரை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை இலங்கை பொலிஸார் கோரியுள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் 21ஆம் திகதி ஹிக்கடுவ, வவுலகொட பிரதேசத்தில் வெளிநாட்டுப் பெண் ஒருவர் தங்கியிருந்த வீடொன்றை உடைத்து சுமார் 760,000 ரூபா பணத்தொகை, 2 ATM அட்டைகள் மற்றும் பல பெறுமதியான பொருட்களை திருடியதாக சந்தேகநபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எனவே, பின்வரும் தொலைபேசி இலக்கங்களில் ஏதேனும் ஒன்றைத் தொடர்பு கொண்டு சந்தேக நபர் பற்றி கிடைக்கக்கூடிய தகவல்களை வழங்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஹிக்கடுவ பொறுப்பதிகாரி – 0718591457

ஹிக்கடுவ பொலிஸ் – 0912277222

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply