ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியின் சில்லறை விலையானது 30 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய மையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியின் புதிய விலை ரூபா 1180 என தெரிவித்துள்ளார்.