வவுனியா, தோணிக்கல் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலம் இன்று (22.03.2024) காலை மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, தோணிக்கல் ஆலடி வீதியில் உள்ள பலசரக்கு வியாபார நிலையம் ஒன்றில் இருந்தே குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
வர்த்தக நிலையத்தின் உரிமையாளரான இரண்டு பிள்ளைகளின் தந்தையான 43 வயதுடைய ரங்கசாமி நேசரத்தினம் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தனது குடும்பத்தை பிரிந்து தாயாருடன் வசித்து வந்த இவர் வியாபார நிலையத்தில் தங்கி இருந்த போதே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
