2024 பெப்ரவரியில் வணிகப் பொருட்களின் ஏற்றுமதியில் சிறிதளவு வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்திச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
2024 பெப்ரவரியில் வணிகப் பொருட்களின் ஏற்றுமதி 983.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது, இது 2023 பெப்ரவரி உடன் ஒப்பிடும்போது சராசரியாக 0.17வீத வளர்ச்சியைப் பதிவு செய்தது.
ஜனவரி 2024 உடன் ஒப்பிடும்போது 2024 பெப்ரவரியில் ஏற்றுமதி செயல்திறன் 1.3 வீதமாக அதிகரித்துள்ளது என்றும் ஏற்றுமதி அபிவிருத்திச் சபை அறிவித்துள்ளது.
பெப்ரவரி 2023 உடன் ஒப்பிடும்போது, விவசாய ஏற்றுமதி 11.82 வீதமாக குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காட்டி 255.76 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது.
