விசேட நடவடிக்கையின்கீழ் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த 12பேர் கைது!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்களை கைது செய்வதற்காக பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பேரில் ஆரம்பிக்கப்பட்ட விசேட நடவடிக்கையில்.  ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த மேலும் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி, நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட கடந்த 19ஆம் திகதி முதல் நேற்றைய தினம் வரையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த 63 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply