பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை ஆரம்பம்!

தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்திற்கான விசேட பேருந்து சேவை இன்று  முதல் இயக்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

பண்டிகைக் காலங்களில் கொழும்பு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்கள் கிராமங்களுக்குச் செல்வதற்காக இந்தப் பேருந்து சேவை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், அதற்காக சுமார் 200 மேலதிக பேருந்து சேவையில் பயன்படுத்தப்படும் எனவும் இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இதன்படி கொழும்பில் இருந்து நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் இந்த பேருந்து சேவை இடம்பெறவுள்ளது.

இதேவேளை, பண்டிகை காலத்தை முன்னிட்டு நடத்தப்படும் விசேட ரயில் சேவையும் எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் இடம்பெறவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த சேவையின் கீழ் நாளாந்தம் சுமார் 12 விசேட ரயில் பயணங்களை ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே  திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய இந்த சிறப்பு ரயில் சேவை வரும் 15 ஆம் திகதி வரை இயக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply