நீர்க்கொழும்பு சிறைச்சாலை அத்தியட்சகர் அனுருத்த சம்பாயோ கைது

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் நீர்க்கொழும்பு சிறைச்சாலை அத்தியட்சகர் அனுருத்த சம்பாயோ கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்க்கொழும்பு பொலிஸ் குழுவொன்றின் முன்னிலையில் இன்று அவர் சரணடைந்த நிலையில், இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அவரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நீர்க்கொழும்பு சிறைக் கைதிகளுக்கு சொகுசு வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்த சம்பவம் தொடர்பாக முன்னாள் நீர்க்கொழும்பு சிறைச்சாலை அத்தியட்சகர் அனுருத்த சம்பாயோவுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டது.

இதனையடுத்து, பணிநீக்கம் செய்யப்பட்ட அவரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீர்க்கொழும்பு பதில் நீதவானால் கடந்த 22ஆம் திகதி பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir