மீனவர் பிரச்சனைக்கும் கச்சதீவுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை!

கச்சதீவுக்கும் மீனவர் பிரச்சனைக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை, என அகில இலங்கை மீனவர்கள் தொழிற்சங்க வடமாகாண இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சனை தொடர்பாக இந்தியாவின் தமிழகத் தேர்தல் மேடைகளில் அரசியல் தலைவர்கள் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் வடக்கு தமிழ் மக்கள் வேதனை அடைவதாக அன்னலிங்கம் அன்னராசா நேற்று (14) நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவுடனான உறவு தொடரவேண்டும் என்றும் பூகோள அரசியல் ரீதியாக இந்திய அரசுடன் ஒற்றுமையாக இருக்க விரும்புவதாகவும் இலங்கை மீனவர்கள் தொழிற்சங்க வடமாகாண இணைப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply