காசல்ரீ நீர்த்தேக்கத்தில் குளித்துக் கொண்டிருந்த 17 வயதுடைய சிறுவன் பலத்த நீர் பாய்ச்சலில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிக் ஓயா, காசல்ரீ தோட்டத்தில் வசிக்கும் இளைஞன், இன்று (18) மாலை 3.30 மணியளவில் தனது குடும்ப உறுப்பினர்களுடன் நீர்த்தேக்கத்திற்குச் சென்றுள்ளார்.
காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பாதுகாப்பு உத்தியோகத்தர், பிரதேச மீனவர்கள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து சிறுவனை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
பாதுகாப்பு அதிகாரிகளின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் சிறுவன் நீர்த்தேக்கத்தை முன்னும் பின்னுமாக நீந்திக் கொண்டிருந்த வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.