அண்மையில் எரிபொருள் விலை குறைக்கப்பட்ட போதிலும் பேருந்து கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் சசி வெல்கம தெரிவித்துள்ளார்.
பேருந்து கட்டணங்கள் திருத்தப்படுமா என்பது தொடர்பில் இன்று (02) தீர்மானம் எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு முன்னர் அறிவித்திருந்தது.
கடந்த 30ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டது, இதன்போது டீசலின் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டது.
எவ்வாறாயினும், கடந்த இரண்டு தடவைகள் எரிபொருள் விலையேற்றத்தின் போது பேருந்து கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படாத நிலையில், ஜூலை மாதம் மீண்டும் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமென தனியார் பேருந்து சங்கங்கள் தெரிவித்திருந்தன.
இதன்படி, எரிபொருள் விலை குறைப்புடன் பேருந்து கட்டணங்கள் திருத்தப்படக்கூடாது என சங்கங்கள் தெரிவிக்கின்றன.