மின்சாரத்துறைக்கான உத்தேச சீர்திருத்தங்களை உள்ளடக்கிய உத்தேச இலங்கை மின்சார சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் நிறைவு செய்துள்ளது.
இதன்படி, தீர்மானத்தை இரகசியமாக பாராளுமன்ற சபாநாயகருக்கு அறிவிக்கவுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த மனுக்கள் நீதிபதிகள் விஜித் மலல்கொட, ஷிரான் குணரத்ன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் தொடர்ந்து மூன்று நாட்களாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இலங்கை மின்சார ஊழியர் சங்கத்தின் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் உள்ளிட்ட 14 தரப்பினரால் இந்த மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
