இலங்கை திறந்த மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்களால் மேற்கொள்ளப்படவிருந்த போராட்டத்திற்கு தடை உத்தரவு!

இலங்கை திறந்த பல்கலைக்கழகம் மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் தற்போது க.பொ.த சாதாரண தர பரீட்சை நடைபெறும் நுகேகொடை பிரதேசத்தில் உள்ள பல பாடசாலைகளுக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு நுகேகொட நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. .

பிரதான வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ள அனுலா வித்தியாலயம், புனித ஜோசப் பெண்கள் கல்லூரி, சமுத்திரா தேவி மகளிர் கல்லூரி, புனித யோவான் ஆண்கள் கல்லூரி, சுஜாதா பெண்கள் கல்லூரி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை கருத்திற்கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அப்பகுதியைச் சுற்றி, க.பொ.த சாதாரண தர பரீட்சை நிலையங்களாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றதுடன் அனுலா வித்தியாலயம் பரீட்சை ஒருங்கிணைப்பு நிலையமாகவும் செயல்படுகிறது.

இன்று (13) நடைபெறவுள்ள தமது எதிர்ப்பு பேரணியின் போது ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி வீதி நாடகங்களை நடத்துவதற்கு போராட்டக்காரர்கள் திட்டமிட்டுள்ளதாக கிடைத்த தகவலுக்கு அமைய மிரிஹான பொலிஸ் பரிசோதகர் விடுத்த கோரிக்கைக்கு அமைய நுகேகொட நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply