கொஸ்கொட துவாமோதர புகையிரத கடவையில் கை உழவு இயந்திரம் புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.
நேற்று (13) மாலை மாத்தறையில் இருந்து மருதானை நோக்கி பயணித்த அதிவேக புகையிரதத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த கை உழவு இயந்திரத்தின் சாரதியும் அதில் பயணித்த மற்றுமொருவரும் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும், சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
காயமடைந்த மற்றைய நபர் மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் தெஹிகஹவெல பகுதியைச் சேர்ந்த 49 வயதுடையவர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்கொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
