2.1 மில்லியன் ரூபா பெருமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின்  அதிகாரிகள் 2.1 மில்லியன் ரூபாய் பெருமதியான கடத்தப்பட்ட சிகரெட்டுகளை  கைப்பற்றியுள்ளனர்.

குறித்த நபர்  இன்று காலை விமான நிலையத்தின்  வருகை முனையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு 13 இல் வசிக்கும் 36 வயதுடைய வர்த்தகர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த பயணி நேற்றிரவு  10.15 மணியளவில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இந்தியாவின் மும்பையிலிருந்து வருகை தந்துள்ளார், எனினும் இன்று காலை வரை விமான நிலையத்தின் கடமையற்ற வர்த்தக வளாகத்தில் இருந்த அவர் விமான நிலையத்திலிருந்து வெளியேற முற்பட்ட போதே கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 21,000 சிகரெட் குச்சிகள் அடங்கிய 105 அட்டைப்பெட்டிகள் அவரது பயணப் பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. 

கைது செய்யப்பட்ட பயணி பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் மே மாதம் 22 ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply