அம்பகமுவ பகுதியில் சாதாரண தர பரீட்சை நிலையத்தில் இருந்து இரு மாணவிகள் மாயம்!

அம்பகமுவ பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் க.பொ.த சாதாரண தர பரீட்சை நிலையத்தில் இருந்து வீடு திரும்பாத இரண்டு பாடசாலை மாணவிகளின் பாதுகாவலர்கள் கினிகத்தேன பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த மாணவிகள் அம்பகமுவ தேசிய பாடசாலையின் பரீட்சை நிலையத்தில் நேற்று காலை இடம்பெற்ற பரீட்சைக்குத் தோற்றவிருந்தனர். புகாரின்படி, மாணவி ஒருவர் தனது பெற்றோருடன் தேர்வு மையத்திற்கு வந்துள்ளார்.

நாவலப்பிட்டி நாகஸ்தென்ன மற்றும் கினிகத்தேன அக்ரோயா ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் காணாமல் போன இரு மாணவிகளும் நெருங்கிய நண்பர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

பரீட்சை ஆரம்பிப்பதற்கு முன்னர், பரீட்சை நிலையத்திற்கு அருகில் மாணவர்கள் இருவரும் உரையாடிக் கொண்டிருப்பதை சிலர்  நேரில் பார்த்துள்ளனர். பின்னர் மாணவிகள் நாவலப்பிட்டி நகரில் பாடசாலை சீருடை அணிந்த நிலையில் காணப்பட்டுள்ளனர்.

காணாமற்போன மாணவர்கள் தொடர்பிலான தகவல்களை அதிகாரிகள் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் விநியோகித்துள்ளதுடன், இது தொடர்பில் கினிகத்தேன பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply