ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலஞ்சம், ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான பிரஜைகள் அதிகார அமைப்பு இன்று (15) காலை ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தது.
போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதையடுத்து, பொலிஸ் உத்தியோகத்தர்கள் பதாகைகளை அகற்றியதால், சட்ட அமுலாக்க அதிகாரிகளுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் வாகன அனுமதிப்பத்திரம் வழங்கும் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் கபில முனசிங்கவிடம் மகஜர் ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.
