யாழ். பல்கலைக்கழகத்தில் கவனவீர்ப்புப் போராட்டம்!

கல்விசாரா ஊழியர்களின் சம்பள அதிகரிப்பைக் கோரி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஜனநாயக ஊழியர் சங்கத்தினரால் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னடுக்கப்பட்டது.

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் சம்பள உயர்வு கோரி கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுவரும் நிலையில் யாழ். பல்கலைக்கழக ஜனநாயக ஊழியர் சங்கத்தினரால் இன்று முற்பகல் 11 மணியளவில் யாழ். பல்கலைக்கழக முன்றலில் கவனவீர்ப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது கல்விசாரா ஊழியர்களின் சம்பளத்தை அதிகரி, பல்கலைக்கழக ஊழியர்கள் மாற்றான் வீட்டுப் பிள்ளைகளா?, எம்.சி.ஏ. கொடுப்பனவை அதிகரி்  போன்ற கோஷங்களும் எழுப்பப்பட்டன.

இம்மாதம் 2ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் கல்விசாரா ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தால் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply