எதிர்வரும் லங்கா பிரீமியர் லீக் (எல்பிஎல்) போட்டிகளை திட்டமிட்டபடி நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அந்த சுற்றுத்தொடரின் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் அனுமதி நேற்று (22) உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் அதன் உரிமையில் மாற்றத்துடன் போட்டிகள் நடத்தப்படும் எனவும் குறித்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்பிஎல் போட்டியின் நேர்மை மற்றும் தரத்தை பாதுகாப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் ஆட்ட நிர்ணயத்தை முன்மொழிய முயற்சித்த தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் உரிமையாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான தமீம் ரஹ்மானை மே 31 வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது.