தற்போதைய காலநிலை காரணமாக கடந்த இரண்டு நாட்களாக இடம்பெற்றுவரும் அசம்பாவிதங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கும் வகையில் இன்று (25) இரவு கொழும்பில் பல வீதிகளை போக்குவரத்துக்காக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, பிரேபுரூக் பிளேஸ், பொரளையில் உள்ள கல்லறை சுற்றுவட்டம், தும்முல்ல சந்தி, பௌத்தலோக மாவத்தை, கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தையில் இருந்து கொழும்பு 03 ரொட்டுண்டா சந்தி வரையிலான வீதிகள் இன்று இரவு போக்குவரத்துக்காக மூடப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக கொழும்பில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மரங்கள் முறிந்து விழுந்து, வாகனங்களுக்கு சேதம் மற்றும் போக்குவரத்து இடையூறுகள் போன்ற பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
