மரங்கள் மற்றும் பாறைகள் தண்டவாளத்தில் விழுந்து கிடப்பதால், பதுளை மற்றும் அங்கிருந்து புறப்படும் இரவு நேர அஞ்சல் ரயில்கள் மற்றும் மலையகப் பாதையில் செல்லும் சிறப்பு ரயில்கள் இன்று (25) ரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே அறிவித்துள்ளது.
இதேவேளை, ரயில் தண்டவாளத்தின் மீது இதுவரை 15க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக ரயில்வே பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இண்டிபோலகே தெரிவித்துள்ளார்.
மின்சாரத் தடைகளினால் லெவல் கிராசிங்குகளில் சிக்னல் கோளாறுகள் ஏற்படக் கூடும் என்பதால், ரயில் கடவைகளில் வாகனம் ஓட்டும் போது வாகன சாரதிகள் அவதானமாக இருக்குமாறு ரயில்வே திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
லெவல் கிராசிங்குகளை கடக்கும்போது சிக்னல் இல்லை என்றாலோ அல்லது கிராசிங்குகளில் சிவப்பு சிக்னலுடன் மின்சார மணிகள் தொடர்ந்து ஒலித்தாலோ வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
