கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் பெண்களுக்கான சிறந்த சுகாதார நிலையத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று திறந்து வைத்தார்.
நாடு முழுவதும் சுகாதாரத் துறை வசதிகளை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முன்முயற்சிக்கு இணங்க, நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியில் இந்த திட்டம், 5,320 மில்லியன் ரூபா செலவில் நிரமாணிக்கப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
