கொழும்பு மாநகர சபையின் அதிகார வரம்பிற்குள் முறிந்து விழும் அபாயத்தில் உள்ள மரங்களை வெட்டி அகற்றும் விசேட வேலைத்திட்டமொன்று அமுல்படுத்தப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இன்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பேசிய இராஜாங்க அமைச்சர், இவ்வாறான அதிக ஆபத்துள்ள மரங்களை அகற்றும் நடவடிக்கைகளுக்காக இலங்கை இராணுவம் மற்றும் சிவில் பாதுகாப்பு படை வீரர்களை ஈடுபடுத்த எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
கொழும்பு மாநகர சபையின் பூரண மேற்பார்வையின் கீழ் இது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும், அகற்றப்படும் மரங்களுக்கு பதிலாக புதிய மரங்களை நடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, நிலவும் சீரற்ற காலநிலையினால் மரங்கள் முறிந்து வீழ்ந்தமையினால் இதுவரை 07 பேர் உயிரிழந்துள்ளனர்.
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தரவுகளின்படி, 20 மாவட்டங்களுக்குள் உள்ள 212 மாவட்டச் செயலகப் பிரிவுகளில் 14,754 குடும்பங்களைச் சேர்ந்த 55,406 பேர் மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
