பெருந்தொகையான போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!

பெருந்தொகையான ஹெரோயின் போதைப்பொருளுடன் களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 37 வயதுடைய “வலபால ஹமு” என்ற மாற்றுப்பெயரால் அறியப்பட்டவர் எனவும், அவர் பாணந்துறை, வலபால பிரதேசத்தின் பிரதான வீதியொன்றின் வீதியோரத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர் துபாயில் தலைமறைவாக உள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான “துபாய் தரங்க”வின் முக்கிய கூட்டாளி என்பது தெரியவந்துள்ளது.

களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரிக்கு  பாணந்துறை, வலபல பிரதேசத்தில் ஹெரோயின் கடத்தல் மோசடி தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸாரால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவரிடம் இருந்து சுமார் 50 மில்லியன்ரூபா பெருமதியான  1 கிலோ 850 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, ​​பாணந்துறை, வாத்துவ, பண்டாரகம, ஹொரணை உள்ளிட்ட பல பிரதேசங்களில் ஹெரோயின் சில்லறை விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரான “வலபால ஹமு” என்பவரும் ஹெரோயின் போதைக்கு அடிமையானவர் என தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் கடத்தலுக்கு பயன்படுத்திய கைத்தொலைபேசியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபர் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply