மீன்பிடிக்க சென்றவர் மின்சாரம் தாக்கி பலி!

வந்துரஸ்ஸ, மாவத்தை ஏரியில் மீன்பிடிக்கச் சென்றவர் ஏரியில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் உயிரிழந்தவர் வந்துரஸ்ஸ கலயாய பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சடலம் குருநாகல் வைத்தியசாலையில் வைத்து பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் மின்சாரம் தாக்கி அவர் உயிரிழந்தமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து , மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் விலங்கு வேட்டைக்காக போடப்பட்டிருந்த சட்டவிரோத மின் இணைப்பில் சிக்கி இவர் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் வந்துரஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் வாரியபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply