அஹுங்கல்ல, லோகன்வத்த பகுதியில் கடந்த மே மாதம் 8ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெலி ஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெஹரதென்ன, போகஸ்வெவ பிரதேசத்தில் வைத்து வவுனியா பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமின் உத்தியோகத்தர்கள் குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வெஹரதென்ன, போகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் துப்பாக்கிச் சூடு நடத்த பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அஹுங்கல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
