இலங்கையின் எரிசக்தி துறை மாற்றத்தை முன்னெடுத்துச் செல்வதற்கும் பசுமையான வளர்ச்சி முயற்சிகளை ஊக்குவிப்பதற்கும் நீண்டகாலத் திட்டமொன்றை ஆதரித்து அபிவிருத்தி செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனியார் துறை முதலீட்டாளர்கள் உட்பட அனைத்து பங்குதாரர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
