உத்தேச தொழிலாளர் சட்டங்களை அமுல்படுத்துவதை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
நாட்டிலுள்ள தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் கோரிக்கைகள் கவனத்தில் கொள்ளப்படாவிட்டால் எதிர்காலத்தில் நாடு முழுவதும் கடுமையான போராட்டங்கள் நடைபெறக்கூடும் எனவும் அந்த அமைப்பு அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தற்போதைய தொழிலாளர் சட்டங்களில் ஏதேனும் சீர்திருத்தங்களை செய்வதாயின் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்த பின்னரே அவை மேற்கொள்ளப்படல் வேண்டும் எனவும் சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக் காட்டியுள்ளது
மேலும், சர்வதேச தரங்கள் மற்றும் உரிமைகளை அகற்றுவதன் மூலம் தொழிலாளர் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை பலவீனப்படுத்தும் வகையிலான முன்மொழியப்பட்ட புதிய சீர்திருத்தங்கள் குறித்து சர்வதேச மன்னிப்புச் சபை அதன் கவலையையும் வெளியிட்டுள்ளது.
