கொழும்பில் வடிகானிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்!

கொழும்பு பகுதியில் உள்ள கழிவு நீர் வடிகானிலிருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (29) பிற்பகல் கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டேஸ்புர பகுதியில் பெண் ஒருவரின் சடலம் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில், சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவரது அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படாததைத்தொடர்ந்து , சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் 45 முதல் 50 வயதிற்கு இடைப்பட்ட 4 அடி 09 அங்குல உயரமுடைய பெண் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply