விவாதத்திற்கு வருவீர்களா மாட்டீர்களா? அனுரகுமார கேள்வி!

நிறைவேற்று அதிகாரம் என்பது ஜனாதிபதியின் முழுமையான அதிகாரம் ஆகும், அனைத்து பொருளாதார மற்றும் அரசியல் நடவடிக்கைகளும் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டே தீர்மானிக்கப்படுகின்றன, பொருளாதாரக் குழுக்களால் அல்ல. எனவே, முதலில் விவாதம் என்பனது பொருளாதார குழுக்களுக்கு இடையில் அல்ல தலைவர்களுக்கு இடையிலேயே இருக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், விவாதம் சாத்தியமில்லையென்றால் நேரடியாகக் கூற வேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர், சஜித்தின் கட்சியை சேர்ந்த பொருளாதார குழு முன்வைத்த கடித்தை சஜித் பிரேமதாசவின் ஆலோசகர் நாலக கொடஹேவா நிராகரித்துள்ளதாகவும், அதில் சஜித் பிரேமதாசவின் கையொப்பம் இல்லை என கூறப்படுவதால், அனுமதியில்லாத அவ்வாறான கடிதமொன்றை அடிப்படையாக வைத்து விவாதிப்பதில் அர்த்தமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply