நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மீதான தடை உத்தரவு நீடிப்பு!

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் மேலும் நீட்டித்துள்ளது.

குறித்த மனு இன்று (03) காலை கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதேவேளை   வழக்கின் பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஜயமுதித ஜயசூரிய, வழக்கு தொடர்பான ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதற்கு மேலதிக கால அவகாசம் கோரினார்.

அதன்படி, உரிய ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கி, வழக்கை ஜூலை 13-ம் திகதி திரும்பப் பெற உத்தரவிடப்பட்டது.

எனவே எதிர்வரும் 13ஆம் திகதிவரை குறித்த தடை உத்தரவும் அமுலில் இருக்கும்  என்பதும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply