அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான கலாநிதி திலக் ராஜபக்ஷ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து விலகி ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளார்.
திலக் ராஜபக்ஷ தனது உயர் கல்வியின் பின்னர் இலங்கை இராணுவ மருத்துவப் பிரிவில் கடமையாற்றியுள்ளார்.
அம்பகவெல்ல பிராந்திய வைத்தியசாலை மற்றும் அம்பாறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் தலைவராகவும், அம்பாறை மாவட்ட பிராந்திய சுகாதார சேவை அலுவலகத்தின் பணிப்பாளராகவும் இவர் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.
