2023 (2024) க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பிடும் நடவடிக்கைகள் ஆரம்பிப்பது ஜூன் 8ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
சீரற்ற காலநிலைக்கு மத்தியில் பரீட்சார்த்திகள் மதிப்பீட்டு நிலையங்களுக்கு செல்வதில் ஏற்படும் சிரமங்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அறிக்கையொன்றை வெளியிட்டார்.
முதலில் ஜூன் 6 ஆம் திகதி ஆரம்பமாகத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள்களின் மதிப்பீட்டு நடவடிக்கைகள் இப்போது ஜூன் 8 முதல் ஜூன் 17 வரை நாடளாவிய ரீதியில் நிறுவப்பட்டுள்ள 101 நிலையங்களில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
