தேர்தல் விசேட பாதுகாப்பு நடவடிக்கை ஆரம்பம்

தேர்தல் வாக்களிப்பு தினத்தினை அடிப்படையாக வைத்து இன்று முதல் விசேட பாதுகாப்பு திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இன்று முதல் தேர்தல் நடவடிக்கைகள் பூர்த்தியாகும் வரை நாட்டின் பல பகுதிகளில் விசேட பொலிஸ்சோதனை சாவடிகளை ஏற்படுத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குபெட்டிகளை கொண்டு செல்லும் நடவடிக்கையின் போது விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என பொலிஸ்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir