குறிப்பிட்ட திகதிகளுக்குள் தேர்தல் நடத்தியாக வேண்டும்! கே.டி.லால் காந்த தெரிவிப்பு!

மக்களது நிராகரித்தலின் மத்தியில் பதவிக்கு வந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் அவரது ஆட்சிக் காலம் நவம்பர் 17 அன்றுடன் முடிவடைந்து விடும்.
அதன்படி செப்டம்பர் 17 தொடக்கம் ஒக்டோபர் 17 ஆம் திகதிக்கிடையில் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஜனாதிபதித் தேர்தல் நடத்தியாக வேண்டும்!, என தேசிய மக்கள் சக்தியின் நிர்வாக உறுப்பினர் கே.டி.லால் காந்த தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஒத்திவைப்பிற்கு நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை வழங்குவதற்காக ஆதரவு தெரிவிக்கும் எம்.பி. க்கள் எதிர்காலத்தில் மக்களிடம் ஒளிந்து திரிய வேண்டிய நிலையே ஏற்படும், எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் நிலவுகின்ற அநீதி முறையிலான ஆட்சியை முடிவிற்கு கொண்டு வருவதற்காக மக்கள் தேர்தலுக்காக காத்திருப்பதாகவும், தேர்தலொன்று நடைபெறுமாயின் கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே மக்கள் இவர்களை வெளியேற்றிவிடுவார்கள் என்ற நம்பிக்கை தமக்கு உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply