சட்டவிரோத மின்வேலியில் சிக்கி நபர் ஒருவர் பலி!

பதுளை, நுகே சந்தி பிரதேசத்தில் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள வயல்வெளியில் அமைக்கப்பட்டுள்ள அங்கீகரிக்கப்படாத மின் வேலியுடன் தொடர்பு கொண்ட நபர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றிரவு (3) பதிவாகியுள்ளதாகவும், உயிரிழந்தவர் ஹம்பாவெல ஹிந்தகொட பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வன விலங்குகள் பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்ட மின்சார கம்பியில் சிக்கியமையே மரணத்திற்கு காரணம் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply