இன்று (4) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிவாயு சிலிண்டர்களின் விலையை குறைக்க லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, 12.5 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை 160 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 3,680 ரூபாவாக மாற்றப்பட்டுள்ளது.
இதேவேளை, 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 65 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 1,477 ரூபாவாக மாற்றப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் உள்நாட்டு எல்பி எரிவாயு சிலிண்டர்களின் விலையில் மாற்றம் செய்யப்படஉள்ளதாகவும் லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
