நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட பல்வேறு சம்பவங்களினால் 41 பேர் காயமடைந்துள்ளதாக அமைச்சர் இன்று (4) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும், நாட்டில் உள்ள 23 மாவட்டங்களின் 262 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குள் 33,422 குடும்பங்களைச் சேர்ந்த 130,021 பேர் நிலவும் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் ஸ்தாபிக்கப்பட்ட 116 பிராந்திய நிவாரண நிலையங்களுக்கு 2,368 குடும்பங்களைச் சேர்ந்த 9,248 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
