சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் வாகன புகை பரிசோதனை நிகழ்வு!

சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி பொலிஸ் நிலையம் முன்பாக வாகன புகை பரிசோதனை நிகழ்வு இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.

சுற்றாடல் அதிகார சபை, மோட்டார் போக்குவரத்து திணைக்களம், பொலிஸார் இணைந்து குறித்த செயற்திட்டத்தினை முன்னெடுத்தனர்.

இதன்போது, A9 வீதியில் பயணித்த முச்சக்கர வண்டிகள், பேருந்துகள், பாரஊர்திகள் என அனைத்து வாகனங்களும் பரிசோதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply