கிங் கங்கை மற்றும் நில்வலா கங்கைக்கான வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில் களனி கங்கையின் நீர்மட்டம் தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளதுடன், களுகங்கையின் நீர்மட்டம் படிப்படியாகக் குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, வெள்ள நிலைமையுடன் பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் உள்ளதால், அது தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளுக்கு தேவையில்லாமல் செல்வதை தவிர்க்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
