இலங்கை விமான நிலையங்களில் புதிய நடைமுறை!

இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், நாட்டில் உள்ள சர்வதேச விமான நிலையங்களுக்கு வந்து செல்வதற்கும் புறப்படுவதற்கும் புதிய கடவுச்சீட்டு முத்திரைகளை அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய (Harsha Ilukpitiya) கருத்துப்படி, இந்த ஆண்டு ஜூன் மாதம் 01ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய முத்திரைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தற்போது இலங்கையில் உள்ள ஏனைய சர்வதேச விமான நிலையங்களிலும் புதிய முத்திரைகளின் பாவனை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த திணைக்களம் வருகைக்காக நீல நிற முத்திரையையும் புறப்படுவதற்கு பச்சை நிற முத்திரையையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதேவேளை , நகல் எடுக்க முடியாத வகையில் அவை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply