முன்மொழியப்பட்ட அனுர-சஜித் விவாதத்தில் நிச்சயமற்ற தன்மை!

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இன்று எந்த நேரத்திலும் பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பான உத்தேச விவாதத்திற்குத் தயார் என தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

குறித்த விவாதம் தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி இன்னும் பதிலளிக்கவில்லை எனவும் கட்சித் தலைவர்களுக்கிடையிலான விவாதத்தை இன்றைய தினத்தின் பின்னர் நடத்துவதற்கு தேசிய மக்கள் சக்தி இதுவரை உத்தேசிக்கவில்லை எனவும் அவர் நலிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படும் வரையில் இந்த விவாதத்திற்கு தமது கட்சி தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார தெரிவித்துள்ளார்.

இதன்படி முன்மொழியப்பட்ட திகதிகளில் இருந்து இரு கட்சிகளும் தங்கள் தலைவர்களிடையே விவாதத்தை நடத்த ஒப்புக்கொண்டன.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply