இலங்கையில் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவைகளை வழங்குவதற்கு “Starlink” நிறுவனத்திற்கு TRCSL அனுமதி வழங்கியுள்ளது.
தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் இதனை அறிவித்துள்ளார்.
இதன்படி உரிய வகையில் பொதுமக்கள் கருத்தறியப்பட்டதன் பின்னரே இந்த அனுமதி வழங்கபட்டிருப்பதாகவும், இது தொடர்பான மேலதிக தகவல்கள் நாளை (07) வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.