விடுதலைப்புலிகளின் அன்பு முகாம் இருந்த பகுதியில் புதையல் தேடிய பொலிஸ் அதிகாரி, ஆசிரியர் உட்பட ஐவர் நேற்றைய தினம் இரவு 10.30 மணியளவில் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் இராமநாதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அழகாபுரி பகுதியில் விடுதலைப்புலிகளால் அன்பு முகாம் அமைக்கப்பட்டிருந்த பகுதியில் ஸ்கானர் மூலம் புதையல் தேட முயற்சித்த குற்றச்சாட்டிலேயே குறித்த கைது இடம்பெற்றுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் தலைமையகத்தில் செல் IG பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் பரிசோதகர், மற்றும் தென்னிலங்கை பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்களை மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் இன்று நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.