நாளை மீண்டும் பிரதமராகவுள்ள மோடி!

இந்தியாவில் (India) 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் நாளை (09) இரவு 7:15 மணிக்கு இந்திய ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் மோடி மற்றும் அவரது அமைச்சரவை உறுப்பினர்களுக்கு இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு (Droupadi Murmu) பதவிப் பிரமாணம் செய்து வைக்கவுள்ளார்.

மோடியின் பதவியேற்பு விழாவில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்ஸு , சிசல்ஸ் துணை ஜனாதிபதி அகமது அபிப், மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத், நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல், பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கே உள்ளிட்ட 7 அயல் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply