ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்திய விஜயத்தின் போது, இன்று புதுடெல்லியில், இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கரை சந்தித்துள்ளார்.
தொடர்ந்து மூன்றாவது தடவையாக இந்தியாவின் பிரதமராக தெரிவு செய்யப்பட்ட நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி விக்ரமசிங்க நேற்றைய தினம் (09) இந்தியா சென்றார்.
