பாணந்துறையில் இருந்து மருதானை நோக்கி பயணித்த புகையிரதமொன்று பாணந்துறை புகையிரத நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டதால் கரையோரப் பாதையில் புகையிரதசேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே அறிவித்துள்ளது.
இதன்படி, கரையோரப் பாதையில் இயக்கப்படும் ரயில்கள் தாமதத்தை சந்திக்கும் என இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது.
மேலும் , தடம் புரண்ட ரயிலின் பெட்டி ஒன்று, அருகில் உள்ள ரயில்வே சிக்னல் போர்டில் மோதியதால், அப்பகுதியில் உள்ள ரயில்வே சிக்னல் அமைப்பு முற்றிலும் பழுதடைந்துள்ளது.
இதேவேளை, புகையிரதப் பாதையை வழமையான ரயில் சேவைகளுக்காக மீளமைக்க கணிசமான கால அவகாசம் தேவைப்படும் என இலங்கை ரயில்வேயின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
