தொடரும் தபால் வேலை நிறுத்தம்!

ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி நேற்று (12) நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.

நாடு தழுவிய ரீதியில் இன்று (13) நள்ளிரவு வரை 24 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

தபால் சேவையில் நிலவும் ஊழியர் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதே தொழிற்சங்க நடவடிக்கையின் பிரதான நோக்கமாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறையையும் உடனடியாக ரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்துள்ளார்.

தொடரும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு தனது அதிருப்தியை தெரிவித்த அவர், தற்போதைய கவலைகளுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க தபால் திணைக்களம் ஏற்கனவே திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தடையற்ற தபால் சேவையை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என ருவன் சத்குமார மேலும் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply