குளவிக் கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

கிளிநொச்சி – தருமபுரம் மத்திய கல்லூரியில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி 35 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலையில் இன்று காலை கற்றல் நடவடிக்கை இடம்பெற்றுக்கொண்டிருந்த நிலையில் வளாகத்தில் அமைந்துள்ள நாவல் மரம் ஒன்றில் இருந்த பாரிய அளவிலான குளவிக் கூடு ஒன்று, அதிக காற்றினால் கலைந்துள்ளதுடன் 35 மாணவர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகி தர்மபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதுடன், தற்பொழுது 18 மாணவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, நான்கு ஆசிரியர்களும் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளதுடன் தர்மபுரம் மத்திய கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி அனைத்து மாணவர்களும் உடனடியாக பாடசாலை வளாகத்தில் இருந்து பாதுகாப்பாக வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply