நாளை முதல் பல்கலைக்கழக அனுமதி!

2023/2024 கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான ஒன்லைன் விண்ணப்பங்கள் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் 2024 ஜூன் 14 ஆம் திகதி முதல் உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்கள் தமது விண்ணப்பங்களை நாளை காலை 6 மணி முதல் www.ugc.ac.lk என்ற இணையதளத்தின் ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள் ஜூலை 5 என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply