திருகோணமலையில் வாகன விபத்தில் பலியான இளைஞன்!

திருகோணமலை மாவட்டம் சம்பூர் பொலிஸ் பிரிவிற்கு உற்பட்ட சேனை யூர் – மயிலிமலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சம்பூர் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சேனையூர் 6ம் வட்டாரத்தைச் சேர்ந்த வி.விதுர்சன் (வயது 21) என்ற இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதோடு சடலம் தற்போது மூதூர் தள வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் பிறவிகுறைபாடு உடையவர் என்பதுடன் இறந்தவரின் சகோதரரும் சில வருடங்களுக்கு முன்னர் இவ்வாறான நிலையில் உயிரிழந்துள்ளதாக சம்பூர் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரனையை சம்பூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply